ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி? 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முனைப்பு காட்டும் இலங்கை அணி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2022, 11:25 am
3rd t20 - updatenews360
Quick Share

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3 வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில்,இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி,களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து,வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இறுதியில் 17.1 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.இதனால்,இலங்கை அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3 வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கையை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Views: - 1029

0

0