விம்பிள்டன் டென்னிஸ் போட்டி… சானியா ஜோடி வெற்றி… போபண்ணா ஜோடி ஏமாற்றம்..!!

2 July 2021, 6:15 pm
sania mirza - updatenews360
Quick Share

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – அமெரிக்காவின் பெதானி மாடெக் சாண்ட்ஸ் ஜோடி, சிலியின் ‘அலெக்ஸா – அமெரிக்காவின் டெசிரே ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில், 7-5,6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சானியா – பெதானி ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

இதேபோல, ஆடவர் இட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா – திவிஜ் சரண் ஜோடி, பின்லாந்தின் ஹென்றி கொன்டினன் – பிரான்சின் ரோஜர் வேஸலின் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Views: - 492

0

0