தனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல்? மொயின் அலி திடீர் ஓய்வு அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 9:23 am
Moieen Ali Retirement- Updatenews360
Quick Share

இங்கிலாந்து ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரரான 34 வயதாகும் மொயின் அலி ஆல் ரவுண்டர் ஆவார். இது வரை 64 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற மொயின் லி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகள் படைத்துள்ள இவர், கடந்த 2016 ஆம் ஆண்டில் 4 டெஸ்ட் சதங்களை எடுத்துள்ளார். தவிர 2017 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

மேலும் கடந்த 2018-19 ஆம் வருடம் நடந்த இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 6 டெஸ்ட் பந்தயங்களில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய மொயின் அலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Views: - 345

0

0