வட்டெறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் தோல்வி

Author: Udayaraman
2 August 2021, 10:31 pm
Quick Share

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டெறிதல் போட்டியில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் பதக்க வாய்ப்பை இழந்தார். வட்டு எறிதல் இறுதிச்சுற்று போட்டியில் ஆறாம் இடம்பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் வட்டெறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் தோல்வியை தழுவினார்.ஆறு முயற்சிகளில் மூன்று தோல்வியடைந்தது (FOUL). மற்ற மூன்று முயற்சிகளில் 61.62, 63.70 மற்றும் 61.37 மீட்டர் தூரம் வரை, வட்டை அவர் எறிந்திருந்தார். பதக்கத்தை நெருங்க முடிந்த அவரால் அதை வெள்ள முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம் தான். மகளிர் வட்டெறிதலில் அமெரிக்காவின் வலேரி, ஜெர்மனியின் கிறிஸ்டின், கியூபாவின் யைமி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.கமல்ப்ரீத் கவுர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் மூன்று இடம் பிடித்த வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Views: - 213

0

0