பெண்கள் சேலஞ்ச் டி20 கிரிக்கெட் இன்று தொடக்கம் : மிதாலிராஜ் – ஹர்மன்பிரீத் அணிகள் மோதல்

4 November 2020, 3:53 pm
womens cricket - updatenews360
Quick Share

பெண்கள் செலஞ்ச் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் சூப்பர் நோவாஸ் – வெலோசிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியாக கருதப்படும் பெண்கள் சேலஞ்ச் டி20 தொடரின் 3வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ், வெலோசிட்டி, டிரைல்பிளாசர்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இன்று நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும், மிதாலி ராஜ் தலைமையிலான வெலோசிட்டி அணியும் மோதுகின்றன. கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் நோவாஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு வெலோசிட்டி பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. இந்திய நேரப்படி, இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Views: - 36

0

0