“இன்னும் மூன்று மாதம் உலக மக்கள் அனைவரும் இறந்துப்போவார்கள்” – ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் புலம்பல்…!

23 March 2020, 1:01 pm
Quick Share

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் சோயிப் அக்தர் “இன்னும் மூன்று மாதம் உலக மக்கள் அனைவரும் இறந்துப்போவார்கள்” என்று புலம்பியுள்ளார். உலகமெங்கும் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பால் ஏற்கனவே 13000 பேருக்கு மேல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


“பணம் உள்ளவன் பிழைத்துக்கொள்வான். பணம் இல்லாதவன் பிணமாகத்தான் மாறுகின்றான். அவர்களின் வாழ்க்கையை நினைத்துப்பார்த்தால் மிகவும் கவலையாக உள்ளது. இந்த நேரத்தில் கூட மத ரீதியான பிரிவினைகளை நான் பாகிஸ்தான் நாட்டில் பார்க்கிறேன். இனிவரும் காலகட்டத்திலாவது இந்த நிலை மாறவேண்டும்.”


“மதத்திற்கு மேலான மனிதத்தை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். கதவுகளை மூடினாள் மட்டும் கொரோனாவிலிருந்து நாம் தப்பித்துவிட முடியாது. கொரோனாவால் எதிர்க்காலத்தில் ஏற்படும் இன்னல்களை இப்போதே ஆராய்ந்து அதற்கான செயல்முறைகளை சரிசெய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.