உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு : ஐபிஎல்லை விட அதிகம்தான்…!!!

14 June 2021, 6:19 pm
williamson - kohli - test - updatenews360
Quick Share

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத்தொகை பற்றி அறிவிக்கப்பட்டள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜுன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நேரில் காண 4,000 ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் கள நடுவர்களாக மைக்கேல் காவ் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளனர். மேலும், தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்ல்பாரோவும், கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராக பணியாற்ற இருக்கின்றனர்.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்குரூ.11.72 கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியடையும் அணிக்கு ரூ.5.86 கோடி பரிசாக வழங்கப்பட இருக்கிறது. போட்டி சமனில் முடிந்தால், பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசுத தொகை ஐபிஎல் .தொடரில் வழங்கப்படும் பரிசுத் தொகையை விட சற்று அதிகமாகும். முன்பு 20 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 376

0

0