உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன்: கடைசி போட்டியில் பிவி சிந்து வெற்றி, ஸ்ரீகாந்த் ஏமாற்றம்!

29 January 2021, 6:05 pm
Quick Share

உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்றார். ஆனால் ஆண்கள் பிரிவில் ஸ்ரீகாந்த் கடைசி போட்டியிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

பிடபிள்யுஎப் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடக்கிறது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய வீரர்கள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஏற்கனவே வெளியேறினர். இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, முதல் லீக் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூ யிங்கிடம் 21-19, 12-21, 17-21 என தோல்வியடைந்தார். இரண்டாவது லீக் போட்டியில் சிந்து, தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோனிடம் 19-21, 13-21 என்ற நேர் செட்களில் சிந்து வீழ்ந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த கடைசி போட்டியில் சிந்து, தாய்லாந்தின் சோச்சுவாங்கை 21-18, 21-15 என்ற செட்களில் வீழ்த்தி அசத்தினார். இதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் ஆண்டிரஸ் ஆண்டன்சனை எதிர்கொண்டார் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், இதில் 15-21, 21-16, 21-18 என வீழ்ந்தார். இரண்டாவது ஆட்டத்திலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த் சீனதைபேவின் வாங் வீயிடம் 19-21, 21-9, 21-19 என தோல்வியை சந்தித்தார்.

இதையடுத்து ஸ்ரீகாந்த் தனது கடைசி போட்டியில் ஹாங் காங்கின் லாங் அங்கசை சந்தித்தார். இதன் முதல் செட்டை 21-12 என ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். அடுத்த இரண்டு ஹாங் காங்கின் லாங் அங்கஸ் 21-18, 21-19 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்

Views: - 0

0

0