சவுதாம்டனில் இன்றும் மழை… டென்னிஸ் பேட்டை கையில் எடுத்த வீரர்கள்… 4வது நாள் ஆட்டம் ரத்தாக வாய்ப்பு… ரசிகர்கள் ஏமாற்றம்..!!

21 June 2021, 5:19 pm
match rain - updatenews360
Quick Share

சவுதாம்டனில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று 2வது நாள் ஆட்டத்தின் போது டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – கில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா (34), சுப்மன் கில் (28) ஆட்டமிழந்ததை தொடர்ந்து, கேப்டன் கோலி – ரகானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு மளமளவென விக்கெட்டுக்கள் சரிந்தன. கோலி (44), ரகானே (49) ரன்களில் வெளியேறிய நிலையில், பின்கள வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து, பேட் செய்த நியூசிலாந்து அணி 3ம்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. கான்வே (54), லாதம் (30 ரன்கள் எடுத்தனர்.

இந்த நிலையில், இன்று 4வது நாள் தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆட்டம் தடைபட்டுள்ளது. தொடர்ந்து மழை நீடித்தால், ஒருபந்து கூட வீசாத நிலையில் 4வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்தப் போட்டி தொடர்ந்து மழையால் தடைபடுவதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் மைதானத்தில் உள்ள டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட உள்அரங்க விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 345

0

0