தொலைந்துப் போன ராயல் சாலென்ஜர்ஸ் பெங்களூரு அணி…! குழப்பத்தில் கோலி மற்றும் டீ வில்லியர்ஸ்…!

13 February 2020, 11:28 am
Quick Share

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் IPL கிரிக்கெட் லீக் வரும் மார்ச் இறுதியில் தொடங்கவுள்ளது. என்ன தான் இந்திய அணியின் கேப்டன் கோலி தனது நாட்டை உயர்ந்த இடத்தில் வைத்திருந்தாலும் தனது IPL அணியை சிறப்பாக பார்த்துக்கொள்ளவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக மந்த நிலையில் தான் உள்ளது.


தற்போது இந்த அணியின் சமூக வலைத்தளங்கள் திடீரென்று காணாமல் போன செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விராட் கோலி “கேப்டனான என்னிடமும் இந்த தகவலைப்பற்றி எதுவும் கூறவில்லை. உங்களுக்கு எதுவும் தேவையென்றால் என்னிடம் முதலில் கேளுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.


அதனையடுத்து அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆபிரகாம் டீ வில்லியர்ஸ் “சமூக வலைத்தளங்களில் என்ன தான் நடக்கிறது. இந்த நிகழ்வு தாற்காலிகமானதாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார். இதுமட்டுமின்றி மற்ற IPL அணிகள் “நாங்க வேணும்னா ஒன்னு கிரியேட் பன்னித் தரட்டுமா.?” என்று கிண்டல் செய்துவருகின்றனர்.

Leave a Reply