சச்சினுக்கே சவால் விட்ட யுவராஜ்சிங்… சபாஷ் சரியான போட்டி!! (வைரல் வீடியோ)

16 May 2020, 1:06 pm
sachin - yuvvraj - updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தலால் விதிக்கப்பட்ட ஊரடங்கிற்கு மத்தியில் சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், வீரர்கள் தங்களின் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. எனவே, அவர்கள் தங்களின் நேரத்தை கழிக்க சமூக வலைதளங்களில் சக வீரர்களுடன் அரட்டை அடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் பேட்டின் விளிம்பின் மூலம் பந்தை இடைவிடாமல் மேல்பக்கத்தில் தட்டி தட்டி விளையாடுகிறார்.

இதை சவாலாக ஏற்று சச்சின், ரோகித் சர்மா மற்றும் ஹர்பஜன்சிங்கும் இதுபோன்ற வீடியோவை பதிவிட வேண்டும் என சவால் விடுத்தார். இந்த சவால் சச்சின், ரோகித்திற்கு ஈஸியாக இருக்கும என்றும், ஆனால், பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங்கிக்கு எளிதாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply