ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள்..! யுவராஜையே அலறியடித்து டுவிட் போடச் செய்த திவாடியா..!

28 September 2020, 12:57 pm
tewatia-yuvraj-updatenews360
Quick Share

சென்னை : பஞ்சாப்பிற்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்க விட்ட திவாடியா அனைவரையும் தனது பக்கம் திருப்பியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, கேப்டன் ராகுல் (69), மயாங்க் அகர்வால் (106) குவிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து, இமாலய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித் (50), சாம்சன் (85) அபாரமாக ஆடினர். இவர்களுடன் முதல்தர கிரிக்கெட் வீரரான திவாடியா, ஆரம்பத்தில் பந்துகளை வீணடித்ததால், கடும் விமர்சனத்திற்குள்ளானார். இறுதியில், காட்ரோல் வீசிய 17வது ஓவரில் 5 சிக்சர்களை பறக்க விட்டு, அசத்தினார். அந்த ஓவரில் ஒரு பந்தை மட்டும் வீணடித்தால், 6 பந்துக்கு 6 சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனை பட்டியலில் இடம் பெறுவதை தவற விட்டார்.

திவாடியாவின் அபார ஆட்டத்தினால் 226 ரன்கள் சேர்த்து, அதிக இலக்கை எட்டிப்பிடித்த அணி என்ற சாதனையை ராஜஸ்தான் அணி பெற்றது.

அதிரடி ஆட்டத்தினால் ரசிகர்ளை மட்டுமின்றி முன்னாள் வீரர்களையும் தன் பக்கம் திருப்பினார் திவாடியா.

அந்த வகையில், ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த சாதனையை தன்வசம் வைத்துள்ள முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங்கும், திவாடியாவின் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். நேற்றை ஆட்டம் குறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ” மிஸ்டர் திவாடியா ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி. என்ன ஒரு ஆட்டம். அபாரமான இந்த வெற்றியை பெற்ற ராஜஸ்தான் அணிக்கு வாழ்ததுக்கள். மயாங்க் மற்றும் சாம்சன் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.