வாழ்க்கையே ஒரு பரீட்சை தான்.. நீட் தேர்வை பார்த்து மாணவர்கள் பயப்படக்கூடாது : மாணவர்கள் மத்தியில் அண்ணாமலை பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 4:01 pm
annamalai Speech - Updatenews360
Quick Share

வாழ்க்கை என்பதே ஒரு பரீட்சைதான். மாணவர்கள் நீட் தேர்வை பார்த்து பயப்படக்கூடாது என நாமக்கல்லில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

நாமக்கல் நகர பாஜக மற்றும் தனியார் பள்ளி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பயிற்சி மையத்தின் சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

பின்னர் மாணவர்களிடம் பேசிய அவர், நீட் வந்த பிறகுதான் ஒரே தேர்வு எழுதினால் அனைத்து மருத்துவக்கல்லூரியிலும் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நீட் வந்த பிறகுதான் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருக்கும் மாணவர்களும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளதாகவும், நீட் மூலம் அனைவருக்கும் சம வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டு நீட் எழுதியதில் 58 சதவீதம் என்பது இந்திய அளவில் தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளதாகவும், வாழ்க்கை என்பதே ஒரு பரீட்சைதான்.

மாணவர்கள் நீட் தேர்வைப் பார்த்து பயப்படக்கூடாது. ஒழுக்கம், மன உறுதி, கடின உழைப்பு, விடாமுயற்சியோடு படித்தால் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என பேசினார்.

Views: - 623

0

0