வேலை வாங்கித் தருவதாக குவைத் நாட்டிற்கு அழைத்து சென்று அறையில் அடைத்து பாலியல் தொல்லை : கதறிய பெண்.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 1:17 pm
Harrassment - Updatenews360
Quick Share

ஆந்திரா : வேலை வாங்கித் தருவதாக குவைத் நாட்டிற்கு அழைத்துச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் குடும்பத்தாரிடம் கதறிய வீடியோ வெளியகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி மாவட்டம் ஏர்ராவாரி பாளையம் வட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை குவைத் நாட்டிற்கு வேலைக்காக அழைத்துச் சென்ற முகவர்கள் (agent) பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கண்ணீருடன் செல்போனில் செல்பி வீடியோ வெளியிட்டு குடும்பத்தாரிடம் காப்பாற்றக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஏர்ராவாரி பாளையம் வட்டி பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரவாணி. திருமணமான இவர் கடந்த மாதம் 21 தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்ற நிலையில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்ற முகவர் செங்கல்ராஜா மற்றும் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த பாபாஜி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வருவதாகவும் அறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும் கண்ணீருடன் செல்போனில் செல்பி வீடியோ வெளியிட்டு குடும்பத்தாரிடம் காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனைவியின் செல்பி வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் மாமியார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஸ்ரவாணி மீட்டு தரக்கோரி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 566

0

0