அந்த படத்திற்காக 1 ரூபாய் கூட சம்பளமே வாங்காமல் நடித்த ரஜினி…. இது தான் ஸ்டாருக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்யாசம்…!!!

Author: kavin kumar
18 April 2022, 4:08 pm
Rajinikanth
Quick Share

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய், அஜித். , சூர்யா ,தனுஷ் ,விஜய்சேதுபதி ஆகியோர் தான் . இவர்கள் சினிமாவில் மிகவும் பிஸி ஆன நடிகர்கள் என்றும் கூறலாம் .

விஜய் மற்றும் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் வலிமை , பீஸ்ட் இரண்டுமே மக்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ நடிகர்களில் சம்பளம் மட்டும் எகிறி கொண்டே போகிறது.

மேலும் சில பிரபலங்கள் நடிகர்கள் விஜய், அஜித் உள்ளிட்டோர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய பிறகே படத்தில் நடிக்கின்றனர்.படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ சம்பளத்தை உயர்த்தி கொண்டே போகின்றனர் . இதனால் தமிழ் திரைப்படங்களின் தரம் குறைந்து வருவதாகவும், மற்ற மொழி திரைப்படங்கள் இங்கு வரவேற்பை பெறுவதாகவும் கூறுகின்றனர் .

சினிமா நடிகர்கள் சம்பளத்தை உயர்த்துவதிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் நடித்த பான் இந்தியன் படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடித்திருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ சிவாஜி ‘, ‘எந்திரன்’ போன்ற திரைப்படங்களுக்காக ரஜினிகாந்த திரைப்படம் வெளியாகும் வரை ஒரு ரூபாய் கூட சம்பளமே பெறாமல் நடித்துள்ளார். இதனை M.சரவணன் மற்றும் கலாநிதி மாறன், உள்ளிட்டோர் பெருமையாக தெரிவித்துள்ளனர்.

இதனை ரஜினியின் ரசிகர்கள் அதிக சம்பளம் யார் வாங்குவது யார் என்று போட்டி போடு கொண்டிருக்கும் விஜய், அஜித்தை விமர்சிக்கும் வகையில் அந்த வீடியோவை பரப்பி வருகின்றனர்.

Views: - 936

2

1