கதறும் கங்குவா… நெகட்டிவ் விமர்சனத்துக்கு இதுதான் காரணமா?

Author: Selvan
15 November 2024, 11:51 am

கங்குவா கதைக்களம்

1070 மற்றும் 2024 என இரு வேறு கட்டங்களில் நடப்பது போல் கதை எடுக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு கோவாவில் பவுண்டி ஹன்டராக இருக்கும் பிரான்சிஸ் சூர்யா அங்க இருக்க கூடிய காவல் துறைக்கு ரகசியமாக குற்றவாளியை கண்டுபிடித்து குடுக்கும் வேலை பார்த்து வருகிறார்.

KANGUVA SURYA DOUBLE ACT ROLE

அதே நேரத்தில் ரகசிய ஆராய்ச்சி பரிசோதனை செய்யும் ஆராய்ச்சி கூடத்திலிருந்து தப்பித்து வரும் சிறுவனும்,சூர்யாவும் தற்செயலாக சந்திக்கிறார்கள்.இருவருக்கும் முன்ஜென்ம பகை இருப்பதை உணர்ந்த பிரான்சிஸ் அந்த சிறுவனை கொல்ல துடிக்கும் கூட்டத்திலிருந்து சிறுவனை மீட்க போராடுகிறார்.

அங்கிருந்து கதை 1970 க்கு நகர்கிறது. அதன் பின்பு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதி கதையை கொண்டு செல்கிறது.

சொதப்பிய கங்குவா

கற்பனை தீவு,முன்ஜென்ம பகை,பழங்குடிய வீரனின் வாழ்க்கை கதை போன்ற விசயங்களை பிரமாண்டமாகவும்,சுவாரசியமாகவும் எடுத்து சொல்ல முயற்சிக்கிறார் இயக்குனர் சிவா.படத்தின் சண்டைக்காட்சிகள்,கிராபிக்ஸ்,ஒளிப்பதிவு என தொழில்நுட்பரீதியாக பிரமாண்டமாக எடுத்த சிவா கதையை கோட்டை விட்டார்னு சொல்லலாம்.

DIRECTOR SHIVA MISTAKE

அந்த அளவிற்கு கதை நிறைய இடத்தில் காலை வாரிவிடுகிறது.படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ள சூர்யா வரும் காட்சிகள் மட்டுமே ரசிகர்களை ஆறுதல் படுத்துகிறது.

இதையும் படியுங்க: சம்பவம் செய்த சினேகன்…திகைத்து போன கன்னிகா..!என்னவா இருக்கும் ?

படத்தில் வரும் நிறைய காட்சிகளை ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டிருக்கிறார் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.தேவையில்லாத இடத்தில் டிஸ்பியின் இசையும் காதை பஞ்சராக்கிவிடுகிறது.மொத்தத்தில் பிரமாண்ட காட்சிகளை ரசிக்கும் நபராக இருந்தால் தியேட்டரில் போய் பார்க்கலாம் இல்லையென்றால் OTT யில் வரும் வரை காத்திருந்து கங்குவாவை பார்க்கலாம்.

  • Aadujeevitham Oscar selection மூன்றாவது முறை ஆஸ்காரை குறிவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்…எந்த படத்திற்கு தெரியுமா ..!
  • Views: - 275

    0

    0