போதைப் பழக்கத்தை தூண்டுகிறதா? நிறங்கள் மூன்று படத்தின் திரை விமர்சனம்…!
Author: Selvan22 November 2024, 7:28 pm
துருவங்கள் பதினாறு என்ற வித்தியாசமான த்ரில்லர் படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த கார்த்திக் நரேன் தற்போது ‘நிறங்கள் மூன்று’ என்ற படத்தை இயக்கி உள்ளார். சரத்குமார், அதர்வா,ரகுமான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
அடையாறில் உள்ள இளைஞர்(அதர்வா) வெற்றி,சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்துடன் சினிமா கம்பெனிகளுக்கு ஏறி இறங்குகிறார். வெற்றிக்கு போதை பழக்கம் வேறு இருக்கிறது.
ஒரு பிரபல இயக்குனரிடம் கதை சொல்ல, அந்த கதையை திருடி விடுகிறார் அந்த இயக்குனர். கோபத்தில் உச்சிக்கு சென்ற இளைஞர் அதிக அளவில் போதை மருந்துகள் உட்கொள்கிறார்.
இதற்கிடையில்,இவர் வீட்டு அருகில் ஒரு பள்ளி ஆசியரின் மகளை கடத்துகிறார்கள். அதை அவர் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
இதையும் படியுங்க: கீர்த்தி சுரேஷ்க்கு தொல்லை : தனுஷை எச்சரித்த ரஜினி..வெளிவந்த ரகசியம்..!
ஆசிரியர்(ரகுமான்)வசந்த் தன் மகள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.இதனை ஒரு புதிய கோணத்தில் பார்க்க கூடிய காவல் துறை அதிகாரி(சரத்குமார்) விசாரணை செய்கிறார்.
இந்த மூன்று சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை படம் ஆரம்பித்த சில மணி நேரத்தில் சொல்லி விடுவதால் படத்தின் விறுவிறுப்பு அங்கேயே குறைந்து விடுகிறது
படத்தின் இறுதியில் இயக்குனர் ஒரு மெசேஜ் வைத்திருக்கிறார்.இந்த காட்சியை பார்ப்பதற்கு முன் நிறைய தவறான போதை விஷயங்களை பார்க்க வேண்டி உள்ளது.
இப்படத்தில் போதை மருந்துகளை பயன்படுத்தும் விதம் பற்றி வெளிப்படையாக இயக்குனர் காட்டிருப்பார்.தமிழ்நாட்டு இளைஞர்களிடம் போதை பழக்கம் வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இது போன்ற காட்சிகளை வைக்கலாமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இசையும், ஒளிப்பதிவும் படத்தில் நன்றாக உள்ளது . அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பை கூடுதலாக ஏற்படுத்தியிருந்தால் ‘நிறங்கள் மூன்று‘ ரொம்ப திரில்லரா அமைந்திருக்கும்.