இந்தியன்-2 தோல்விக்கு பிறகு இயக்குனர் சங்கர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார்.தில் ராஜு தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ராம் சரண்,கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா,அஞ்சலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதையை தான் சங்கர் பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளையெல்லாம் பிரம்மாண்டமாக நடந்ததால்,படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.அந்த வகையில் இன்று பான் இந்திய படமாக வெளிவந்துள்ள கேம் சேஞ்சர் படம் மக்களை கவர்ந்ததா இல்லையா என்பதை பாப்போம்
மதுரையில் உள்ள ஒரு கலெக்டரின் உண்மை சம்பவத்தை தழுவி இப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தில் ராம் சரண் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.அந்தவகையில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ள ராம் நந்தன் தனது தந்தை அப்பண்ணாவின் கனவை நிறைவேற்ற,ஊழலுக்கு எதிராக எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் கருவாக உள்ளது.
படத்தில் ராம் சரண் ஸ்டைலிஷ் ஐஏஎஸ் அதிகாரியாகவும்,எளிய கிராமத்து இளைஞனாகவும் தன்னை மாற்றிக்கொண்டு, இரண்டு வேடங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.ராம் சரண் தன்னுடைய மாவட்டத்தில் எந்த ஒரு ஊழலும்,குற்றமும் நடக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.இதற்கு அம்மாநிலத்தின் முதலமைச்சரும் உறுதுணையாக இருக்கிறார்.
இதையும் படியுங்க: மகனுக்காக அதை பண்ண ரெடி…பட விழாவில் அமீர் கான் பரபர பேச்சு..!
இதனால் படத்தில் CM மகனாக வரும் எஸ் ஜே சூர்யா தன்னுடைய மணல் கொள்ளையை நடத்த முடியாமல் திணறி வரும் சூழலில் CM-ஐ திட்டமிட்டு கொல்லுகிறார்.அடுத்து ராம் சரணை பழிவாங்க நினைக்கும் போது எஸ் ஜே சூர்யாவுக்கும் ராம் சரணுக்கும் பகை ஏற்படுகிறது.CM இறப்பதற்கு முன்னால் அம்மாநிலத்தின் அடுத்த CM யார் என்பதை ஒரு வீடியோவில் சொல்லியிருப்பதால்,அது வைரல் ஆகி ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியாக்கியது.
இதனால் எஸ் ஜே சூர்யாவுக்கும் ராம் சரனுக்கும் பகை பல மடங்கு அதிகரித்தது.அதன் பின்பு ஆட்சியில் யார் அமர்ந்தார்,எஸ் ஜே சூர்யா என்ன ஆனார் என்பதே படத்தின் மீதி கதை.
இப்படத்தில் பல கோடி செலவில் எடுக்கப்பட்ட பாடல்கள் தமனின் இசையில் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. மொத்தத்தில் கேம் சேஞ்சர் ஒரு சமூக அக்கறையுடன்,மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக உருவாகியுள்ளது.
படத்தில் ராம் சரண் மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை சங்கர் அற்புதமாக பயன்படுத்தியுள்ளார்.இந்தியன்-2 தோல்விக்கு பிறகு கேம் சேஞ்சர் படத்தின் மூலம் இயக்குனர் சங்கர் கொஞ்சம் பெருமூச்சுவிட்டுள்ளார் என்று சொல்லலாம்.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.