தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி… தலைமையின் முடிவுக்காக காத்திருக்கிறேன் : கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு…!

Author: Babu Lakshmanan
13 April 2022, 4:15 pm
Quick Share

கோவை : தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற எம்பி கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது ;- தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்ட போது, தமிழகத்தில் டார்கெட்டெட் சப்சிடி மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளனர். நான் எப்போது தலைவராக வருவேன் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும். தேசிய அளவில் பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி காங்கிரஸ்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பண வீக்கம் அதிகரிக்கிறது. சாமானிய மக்கள் தான் இந்த சுமையை தாங்க வேண்டும். தற்போதைய பிரதமரும், நிதியமைச்சரும் இருக்கும் வரை விலைவாசி குறையாது. இந்தியாவிற்கு இப்போது சமத்துவம் மிகப்பெரிய தேவை.

கர்நாடகாவில் இசுலாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்து கோவில்களில் திருவிழாக்கள் நடந்தால் மாற்று மதத்தினர் வியாபாரம் செய்யக்கூடாது என தொடர்ந்து நடைபெறுகிறது. பாஜகவின் அரசியல் என்பதே உபியின் புல்டோசர் அரசியல் தான், எனக் கூறினார்.

Views: - 1292

0

0