அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

8 September 2019, 4:47 am
Nellai Accident
Quick Share

நெல்லை: நெல்லை ரெட்டியார்பட்டி அரசு பொறியியல் கல்லூரி அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

நெல்லை ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் அதே பகுதியில் வீடு கட்டி இன்று கிரஹபிரவேச விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிலையில் இவரது நண்பர் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியை சேர்ந்த நேகவியா என்பவருடன் பொருட்கள் வாங்க அதிகாலை 3-30 மணியளவில் காரில் வந்து கொண்டு இருந்தார்.

கார் அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள சாலையில் வரும் போது ஈரோட்டில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் முழுதும் சேதமடைந்த நிலையில் காரை ஓட்டி வந்த நேகவியா மற்றும் சோமசுந்தரம் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்து வந்த பெருமாள்புரம் காவல்துறையினர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையாங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.