ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டு காதலன் வேறு பெண்ணுடன் திருமணம்:காவல் கண்காணிப்பாளரிடம் இளம்பெண் புகார்….!

12 November 2019, 10:11 pm
Thanjai Love Issue-Updatenews360
Quick Share

தஞ்சாவூர்: திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உடலளவிலும்,மனதளவிலும் ஏமாற்றி விட்டு,நாளை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருக்கும் காதலனின் திருமணத்தை தடுத்த நிறுத்த கோரி இளம்பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் வசித்து வரும் கோவிந்தராஜ்-காந்திமதி தம்பதியினரின் மகள் அபிராமி(21),பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். மாதாகோட்டை வைரம் நகரில் வசித்து வரும் ஜான் மில்டன் ராபட் மகன் ஸ்டீபன் பென்னி ராபர்ட் இமானுவேல் பெந்தகோஸ்தே திருச்சபை சொந்தமாக நடத்தி வரும் மதபோதகர். கடந்த 2017 ம் ஆண்டு முதல் அபிராமி திருச்சபைக்கு சென்று வரும் போது ராபட் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அபிராமிடம்,ராபர்ட் திருமண செய்துக்கொள்ளுவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பிய, அபிராமி, ராபர்ட்டுடன் பல முறை தனிமையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ராபர்ட்டிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்த அபிராமி, அவரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு ராபர்ட் திருமண செய்ய மறுத்ததுடன், தான் பெந்தகேஸ்சை சேர்ந்த பெண்ணை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறேன் என கூறியுள்ளாார். இதனால் ஏமாற்றம் அடைந்த அபிராமி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலையம் வந்த ராபர்ட், தான் வேலை தேடிக்கொண்டு திருமணம் செய்துக்கொள்ளுவதாக உறுதியளித்து விட்டு சென்ற நிலையில், நாளை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதை அறிந்த அபிராமி, பெற்றோருடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார். அதில், நாளை நடைபெற உள்ள ராபர்ட்டின் திருமணத்தை தடுத்த நிறுத்த வேண்டும் இல்லை என்றால் திருமண மண்டபம் முன்பு, தற்கொலை செய்துக்கொள்ள போவதாக கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தார்.