ஆட்சியர் கார் மோதி கல்லூரி மாணவி கவலைக்கிடம்!!

19 November 2019, 7:35 am
Permablaur Acc-Udpatenews360
Quick Share

பெரம்பலூர் : துறைமங்களத்தில் இருசக்கர வாகனம் மீது அரியலூர் ஆட்சியர் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவி கவலைக்கிடமாக உள்ளார்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ்-அலமேலு தம்பதியரின் மகள் கீர்த்தனா(21). இவர் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு பிஎட்., படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை துறைமங்கலம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில் சென்ற போது, அவ்வழியே அதிவேகமாக வந்த அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் கார் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவியான கீர்த்தனா படுகாயமடைந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த கீர்த்தனா மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்றார் பின்னர்.

இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி கேஎம்சி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வரும் கீர்த்தனாவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே விபத்துக்கு காரணமான காரில் அரியலூர் ஆட்சியர் கலெக்டர் ரத்னா பயணித்தார் என்றும், அவரது குடும்பத்தார் மட்டுமே பயணித்தார் என்றும் முன்னுக்குப்பின் முரணான தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.