ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டிக் கொன்ற 4 பேர் கொண்ட மர்மகும்பல்!!இதுக்காகவா கொன்னாங்க?!

19 November 2019, 8:04 am
Chennai Murder-Updatenews360
Quick Share

சென்னை : கொளத்தூர் ரெட்டேரி சிக்னல் யூனியன் வங்கி அருகே ஒருவரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து வெட்டி விட்டு தப்பி சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜமங்கலம் போலிசர் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கொலையுண்டவர் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அன்சர் பாட்ஷா என்பது தெரியவந்தது.

செங்குன்றம் சாலை சந்திப்பில் உள்ள யூனியன் வங்கி அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு அன்சர் பாட்சா தனது கள்ளகாதலியுமான லட்சுமி என்பவருடன் ஆட்டோவில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அப்போது லட்சுமியின் மகன் அஜித் மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து வெட்டியதில் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற அவரை விரட்டி சென்று வெட்டினர்.

இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக லட்சுமியின் மகன் சின்ன அஜித், பெரிய அஜித், அஷ்வின் உள்ளிட்ட 4பேரை போலிசார் தேடி வருகின்றனர்.