ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு வாலிபர்கள்…!!! தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி

5 December 2019, 9:20 pm
Pondy 2 Death-Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் அடித்து செல்லபட்ட இரண்டு வாலிபர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

விடூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் புதுச்சேரி வில்லியனூர் புதுபேட் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்தி, தனது நண்பன் வினோத் உள்பட 5 பேருடன் சங்கராபரணி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் வினோத், கார்த்திக் ஆகியோர் தண்ணீரில் அடித்து செல்லபட்டனர். இதை பார்த்த மற்ற நண்பர்கள் கரைக்கு வந்து உதவி கேட்டு அலறினர். உடனடியாக அருகில் வசிப்பவர்கள் விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய வாலிபர்களை தேடினர். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள், வருவாய்துறை அதிகாரிகளுடன் வந்த காவலர்கள் ஆற்றில் மூழ்கி மாயமான இளைஞர்களை ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.