இலங்கைக்குக் கடத்த இருந்த 19 பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…

15 December 2019, 8:03 pm
Rameshwaram-UpdateNews360
Quick Share

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த இருந்த 19 பீடி இலை மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்குக் கஞ்சா கடத்துவது சமீபகாலமாக அதிக அளவில் நடந்து வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் கஞ்சா இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பல்வேறு பகுதிகளுக்கு பீடி இலைகளில் சுற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஏதுவாகப் பீடி சுற்றும் இலைகளும் தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று தனுஷ்கோடி வடக்கு கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சுமார் 19 பீடி இலைகளின் முட்டைகள் மிதந்து கரை ஒதுங்கியது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பீடி இலைகளின் மூட்டைகளை ஆய்வு செய்து அதன் பின் அவற்றை சேகரித்து மண்டபத்தில் உள்ள தமிழக கடலோர பாதுகாப்பு குழும அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக பீடி இலைகளை கடத்த முயற்சி செய்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பிடி இலைகளின் மதிப்பு பல லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.