இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு : தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து

8 September 2019, 6:08 am
isro
Quick Share

சந்திராயன் – 2 வெற்றிக்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் நிலவை அடைவோம் இஸ்ரோ குழுவினருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பாராட்டு
உலகமே எதிர்நோக்கி காத்திருந்த சந்திராயன் – 2 விண்கலத்தின்’ லேண்டர் நிலவில் இருந்து 2.1 கி.மீட்டர் தொலைவில் இருந்தபோது, அதனுடனான சிக்னல் துண்டிக்கப்பட்டது இஸ்ரோ விஞ்ஞானிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே சந்திராயன் – 2 வெற்றிக்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் நிலவை அடைவோம் இஸ்ரோ குழுவினருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பாராட்டு!
உலகமே உற்று நோக்கியிருந்த சந்திரயான் – 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் பணி நடைபெற்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக நிலவில் இருந்து 2.1 கி.மீட்டர் தொலைவில் இருந்தபோது, லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

அதன்பிறகு லேண்டரிடம் இருந்து தற்போதுவரை எந்த சிக்னலும் வரவில்லை. இது இஸ்ரோ விஞ்ஞானிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, சந்திராயன் – 2 விண்கலத்திற்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி, தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்”கோடிக்கணக்கான மக்களை விண்வெளியை நோக்கி பார்க்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆற்றல் மீது நம்பிக்கை வைக்கவும் ஊக்கப்படுத்தியதற்காக இஸ்ரோ குழுவுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் டுவிட்டரில் வெளியிட்ட பாராட்டுச் செய்தி, ”இது தோல்வியல்ல.. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு கற்றல் வளைவு இருக்கும். இது, அந்த விலைமதிப்பற்ற கற்றல் தருணம். கூடிய விரைவில் நாம் நிலவை அடைவோம். இஸ்ரோவுக்கு நன்றி. தேசம் இஸ்ரோவை நம்புகிறது, பாராட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. பின்னடைவை சந்திக்காத விண்வெளி ஆராய்ச்சி உலகில் ஏதுமில்லை. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் முயற்சி போற்றத்தக்கது!

2.1 கி.மீ இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை சுவைப்பர். சாதாரண மனிதனுக்கும் நிலவு ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை சந்திரயான் -2 ஏற்படுத்தியுள்ளது. நிலவை நெருங்கும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும்!

மேலும் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில்’ சந்திரயான் – 2-ன் நிலவுப் பயணத்திற்காக இறுதிக் கட்டப்பணி வரை மிக கவனமாக, நேர்த்தியாக, அறிவுபூர்வமாக, இரவு பகலாக பணியாற்றிய விஞ்ஞானிகளும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றியவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

இம்முயற்சியே விஞ்ஞானிகளுக்கு கிடைத்திருக்கும் முதற்கட்ட வெற்றியாகும். கடந்த 48 நாட்களாக சந்திரயான் 2-ன் நிலவுப் பயணத்திற்காக தொடர்ந்து இரவு பகலாக, அர்ப்பணிப்போடு, அறிவுப்பூர்வமாக பணியாற்றி பல்வேறு தகவல்களை பெற்று, அனுபவம் பெற்று நன்கு தேர்ந்திருக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள்.

சந்திரயான் – 2-ன் நிலவுப் பயணத்திற்கு விஞ்ஞானிகள் மேற்கொண்ட கடினப் பணிகள், தொடர் முயற்சிகள் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கக்கூடிய வெற்றி முயற்சியே.

இந்த முயற்சிகள் வரும் காலங்களில் தொடரும், நிலவுப் பயணத்தில் இந்தியா முழு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

சந்திரயான் – 2-ன் நிலவுப்பயணத்திற்கு விஞ்ஞானிகள் மேற்கொண்ட கடினப் பணிகளும், முயற்சிகளும் மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் அறிவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது என்று இஸ்ரோ குழுவினரை பாராட்டியுள்ளார்