கஞ்சா விற்ற இரண்டு கஞ்சா கொடுக்கிகள் கைது!!

19 November 2019, 7:47 am
Chennai Kanja-Updatenews360
Quick Share

சென்னை : கொடுங்கையூர் , எழில் நகர் , எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்கப்படுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆப்ரஹாம் குரூஸ க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்திய கொடுங்கையூர் போலீசார்  கொடுங்கையூர் குப்பைமேடு அருகே 2 பேரை பிடித்தனர் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

விசாரணையில் அவர்கள் கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி வயது 19 அருள்ராஜ்  19 என்பது தெரியவந்தது இவர்கள் கொருக்குப்பேட்டை பகுதியில் மொத்த வியாபாரியிடம் கஞ்சா  வாங்கி அதை சிறுசிறு பெட்டளங்களாக  பிரித்து கொடுங்கையூர் பகுதியில் விற்று வந்தது தெரியவந்தது.

50 ரூபாய்க்கு வாங்கும் கஞ்சாவை கொடுங்கையூர்  பகுதிகளில் 150 ரூபாய் வரை விற்று வந்ததும் வேலை இல்லாததால் இந்த வேலையை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது மேலும் இவர்களுடன் கஞ்சா விற்ற பாஸ்கரன் என்ற நபரை கொடுங்கையூர் போலீசார் தேடி வருகின்றனர் கைது செய்யப்பட்ட சின்னத்தம்பி மற்றும் அருள்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்