கோவையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்தது

6 August 2020, 7:05 pm
Cbe ESI - Updatenews360
Quick Share

கோவை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்த இரு கர்ப்பிணி பெண்களுக்கு இன்று குழந்தை பிறந்தது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது கர்ப்பிணி பெண் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் தலைமையிலான மருத்துவர் குழு சிகிச்சை அளித்தது. இவருக்கு சுகப் பிரசவத்தில் 2.5 கிலோ எடையுடன் பெண் குழந்தை பிறந்தது.

தவிர கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த 25 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் 2.7 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது.தாய் – சேய் இருவரும் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இ.எஸ்.ஐ. மருத்துவனையில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்ற 26 கர்ப்பிணி பெண்களுக்கு 15 ஆண் குழந்தைகள், 11 பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவனை முதல்வர் ஏ. நிர்மலா தெரிவித்துள்ளனர்.

Views: - 25

0

0