சமுதாய கூடத்தை கூட விட்டுவைக்காத திமுக:சீல் வைக்க வந்த வட்டாட்சியருடன் திமுகவினர் வாக்கு வாதம்…!!

14 November 2019, 9:23 pm
Ambur Community Hall Seal-Updatenews360
Quick Share

வேலூர்: வாணியம்பாடி அருகே அரசுக்கு சொந்தமான சமுதாய கூடத்தை 19 ஆண்டுகளாக திமுக பிரமுகர் ஆக்கிரமித்து வந்ததாக எழுந்த புகாரை அடுத்து சீல் வைக்க வந்த வட்டாட்சியர்க்கும் அப்பகுதியை சேர்ந்த திமுகவினருக்குமிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை ஊராட்சிக்குட்பட்ட செக்குமேடு பகுதியில் கோவிந்தசாமி என்பவர்க்கு சொந்தமான இடத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு அரசு சார்பில் சமுதாய கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டு திருப்பத்தூர் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் லத்தீப் பொது நிதியிலிருந்தும் சேர்த்து ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயகூடம் கட்டிமுடிக்கப்பட்டு அப்போது இருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்துள்ளார். திறந்து வைத்த அன்று முதல் 19 ஆண்டுகாலமாக தனிநபர் ஒருவர் (திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ) ஆக்கிரமித்து அதில் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தபட்டு அதில் கிடைக்கும் வருமானத்தை அரசுக்கு செலுத்தாமல் அவர் ஒருவரே அனுபவித்து வருவதாக வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது.

புகாரின் பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் முருகனுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் அந்த சமூதாய கூடத்திற்கு சீல் வைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட பிறகு சமுதாய கூடத்திற்கு வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள்,வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தி மற்றும் போலீசார் ஆகியோர் சீல் வைக்க வந்த போது வட்டாட்சியரிடம் அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் (தேவராஜின் ஆதரவாளர்கள்) சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அந்த சமூதாய கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தால் அங்கு சிறிது நேரம் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது.