நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் கொள்ளை:இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு…!!
18 November 2019, 10:24 pm
திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் கொள்ளையடித்த வழக்கில் கொள்ளையர் இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள இராமச்சந்திரா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டாவது மாடியில் வாடகை வீட்டில் வசிப்பவர் கமல் அப்பகுதியில் நகைக்கடை தொழில் செய்து வரும் இவர் கடந்த ஏப்ரல் மாதம் மகாவீர் ஜெயந்தி அன்று தான் குடியிருந்த அந்த வீட்டின் பூட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்று இருந்தார் பூட்டிக்கிடந்த வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள்வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றனர் இந்த வழக்கில்மர்ம நபர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் அத்திப்பட்டு புதுநகரில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த சையது கவுஸ் சையது சகில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த இருவரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 20 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்…