நகை கடையில் இரண்டு பெண்கள் கைவரிசை..!! சிசிடிவி பதிவுகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த உரிமையாளர்…

5 December 2019, 9:51 pm
Chennai Jewellery Theft-Updatenews360
Quick Share

சென்னை: நகை வாங்குவது போல் நடித்து வளையலை திருடிச் சென்ற பெண்கள் குறித்து நகைக்கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுனில் நிகார் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 24 ஆம் தேதி பெண்கள் இருவர் சுனில் நிகாரின் கடைக்கு நகை வாங்க சென்றுள்ளனர். குழந்தை வளையல் வேண்டும் என்று நகைகளை பார்த்த பெண்கள் மாடல் பிடிக்கவில்லை என்று அங்கிருந்த சென்றுள்ளனர். மாத இறுதியில் நகைகளின் மதிப்பு குறித்து அழகு பார்த்த உரிமையாளர் ஒரு ஜோடி தங்க வளையல்கள் குறைவதை கவனித்துள்ளார். உடனடியாக சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து பார்த்தபோது, அந்த இரண்டு பெண்கள் நகைகள் வாங்குவது போல் நடித்து ஒரு ஜோடி வளையலை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி பதிவுகளுடன் நகைக்கடை உரிமையாளர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வளையலை திருடிய பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.