நம்ம அமைச்சரா இது ஆச்சரியத்தில் விவசாயிகள்…!! வைரலாகி வரும் போக்குவரத்துத்துறை அமைச்சர்…!!!!

18 November 2019, 10:01 pm
Karur Minister driving tractor -Updatenews360
Quick Share

கரூர்: கரூரில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய டிராக்டரை அமைச்சரே ஒட்டி அதன் தரத்தினை ஆய்வு செய்த அமைச்சரின் செயல் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். அப்போது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 4 டிராக்டர்களை விவசாயிகளுக்கு வழங்கும் முன்னர் அது சரியாக உள்ளதா ? என்று அவரே பரிசோதித்து அவரே ஒட்டி, டிராக்டரில் ஒரு ரவுண்டு வந்த காட்சி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பினையும் சுவாரஸ்யத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடமும் மிகுந்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.