பழவேற்காடு பகுதிகளில் தொடரும் கடல் மணல் கொள்ளை: பொதுப்பணித்துறையினர் மடக்கி பிடித்த போது டிராக்டருடன் தப்பி ஓட்டம்…!

8 November 2019, 8:30 pm
thiruvallur sand theft-Updatenews360
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காடு கடற்கரையோரப் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்களை துப்பணித்துறையினர் மடக்கி பிடித்த போது மணலைக் கொட்டி விட்டு டிராக்டருடன் தப்பி தப்பியோடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடதத் வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் பழவேற்காடு ஏரியை ஒட்டிய பகுதிகளில் உள்ள கடற்கரை மணலை தினந்தோறும் படகுகள் மூலமும், வாகனம் மூலமும் கடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து தனிக்குழு அமைத்து கடல் மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று டிராக்டரில் கடல் மணலை திருடிக்கொண்டு சென்றபோது பொதுப்பணித்துறை ஊழியர்கள் அதனை மடக்கிப் பிடித்தனர். அப்போது மணலைக் கீழே கொட்டி விட்டு டிராக்டரை எடுத்துக்கொண்டு மர்மநபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களையும் டிராக்டரையும் தேடி வருகின்றனர். தொடர்ந்து கடற்கரை மணல் கொள்ளை அடிக்கப்பட்டு கடற்கரை பகுதியில் கடல் நீர் உள்ளே புகும் அபாயம் உள்ளது. மேலும் கடல் மணல் கட்டிட பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதால் கட்டிடங்கள் இடிந்து விழும் சூ