மர்மப் பொருள் வெடித்து இருவர் காயம்..!

10 December 2019, 10:44 pm
Boom Blast-Updatenews360
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மர்ம பொருள் வெடித்து இருவர் காயமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு அனுமந்தபுரம் அருகேயுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளது. இதில் ராமகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டியும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அருகிலிருந்த தண்ணீர் டேங்க், இரும்புத் தூண், மரம், காங்கிரீட் தளம் என அனைத்திலும் துப்பாக்கி குண்டு துளைத்தது போன்று காணப்பட்டது. இதனையடுத்து வெடித்தது துப்பாக்கிக் குண்டுதானா, அல்லது வேறு பொருளா என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.