மாநில தேர்தல் ஆணைய செயலரின் பணியிட மாற்றத்திற்கு ஸ்டாலின் கண்டனம்

14 November 2019, 9:00 pm
stalin- updatenews360
Quick Share

தமிழக தேர்தல் ஆணைய செயலர் பழனிசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக தேர்தல் ஆணைய செயலாளராக இருந்து வந்த எஸ். பழனிசாமி, நகர பஞ்சாயத்து இயக்குநராகவும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எல். சுப்ரமணியன், மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராகவும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது :- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ‘விசுவாசமாகப்’ பணியாற்றியதன் காரணமாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா..?. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமியை, பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது, எனக் கூறியுள்ளார்.