மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அசாம் இளைஞர்கள் முயற்சி…

15 December 2019, 8:10 pm
Merina Protest-UpdateNews360
Quick Share

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த முயன்ற அசாம் மாநிலத்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மாணவர்களும் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கூடி போராட்டம் நடத்த முயற்சித்தனர்.அதற்கு அனுமதி மறுத்த போலீசார், அவர்களை வாகனத்தில் ஏற்றி சென்று வள்ளுவர் கோட்டத்தில் இறக்கிவிட்டனர். மேலும் அங்கு போராட்டம் நடத்திக் கொள்ள அசாம் மாநில இளைஞர்களுக்கு அனுமதி அளித்தனர்.