ரவிச்சந்திரனின் பரோல் கோரிக்கையை நிராகரித்த மதுரை சிறைத்துறை…!!!

18 November 2019, 10:49 pm
Ravichandrans parole request rejected-Updatenews360
Quick Share

மதுரை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் கோரிக்கையை மதுரை சிறைத்துறை நிராகரித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தனது மகன் ரவிச்சந்திரனுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவருக்கு இதுவரை 4 முறை மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டு வெளியே வந்துள்ளார்.இந்நிலையில் அவரது தாயார் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க கோரி மனு அளித்திருந்தார். இந்த மனுவை மதுரை சிறைத்துறை நிராகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க இயலாது என்று ரவிச்சந்திரனின் தாயாருக்கு மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.