பிரபல நடிகருக்கு ரெட் கார்டு கொடுக்க முயற்சியா..? நீ என்ன சொல்றது.. அதிரடி காட்டும் நடிகர்..!

Author: Rajesh
27 May 2022, 11:02 am
Quick Share

அஜித், விஜய் திரைவாழ்க்கையில், வாலி, குஷி என முக்கியமான படத்தை கொடுத்தவர் தான் எஸ் ஜே சூர்யா. சில படங்களை இயக்கிய எஸ் ஜே சூர்யாவுக்கு அதன் பின்பு நடிப்பின் மீது ஆர்வம் வந்துள்ளது. அதேபோல் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.

ஆனால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் சில வருடங்கள் சினிமாவில் இருந்த பிரேக் எடுத்த சூர்யா மீண்டும் வில்லனாக நடிக்க தொடங்கினார். அவருடைய வில்லன் அவதாரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் தற்போது பல படங்களில் எஸ் ஜே சூர்யா கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் எஸ் ஜே சூர்யா இயக்குனராக இருந்த நேரத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் நாம் இணைந்து படம் பண்ணலாம் என கூறி சூர்யாவுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால் அதன்பிறகு எஸ் ஜே சூர்யா நடிப்பில் கவனம் செலுத்தி வந்ததால் இனி படங்களை இயக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனால் அந்த தயாரிப்பாளரிடம் பணத்தை திருப்பிக் கொடுக்க எஸ் ஜே சூர்யா முன்வந்துள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளர் பணத்தை வாங்காமல் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் தேவை என்றால் நான் பிறகு வாங்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனால் எஸ் ஜே சூர்யாவும் சரி என கூறியுள்ளார். அதன் பிறகு தற்போது எஸ் ஜே சூர்யாவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் அந்த தயாரிப்பாளர் அந்தப் பணத்தை எல்லாம் வட்டியுடன் சேர்த்து தற்போது கேட்கிறார். இந்த சம்பவம் 2014ஆம் ஆண்டு நடந்தது. தற்போது அந்த தயாரிப்பாளர் ஒரு கோடிக்கு வட்டியுடன் சேர்த்து பல மடங்கு கேட்கிறார். இதனால் எஸ் ஜே சூர்யா ஒரு கோடிக்கு மேல் ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என கறாராக சொல்லிவிட்டாராம்.

ஆனால் தற்போது எஸ் ஜே சூர்யாவுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்காமல் அவரை படங்களில் நடிக்க விடாமல் செய்வதற்காக ரெட் கார்டு கொடுக்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எஸ் ஜே சூர்யா எதற்கும் அசராமல் எனக்கு நடிப்பே வேண்டாம் நான் சொந்த ஊரில் டீ கடை வைத்து பிழைத்துக் கொள்கிறேன், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என சவால் விட்டுள்ளாராம்.

Views: - 538

0

0