தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை….!!

7 November 2020, 10:56 am
raid - updatenews360
Quick Share

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லட்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வேலூர் மாவட்ட ஊராட்சியில் உதவி இயக்குநர் அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையில், செந்தில்வேல் என்ற அதிகாரியிடம் இருந்து, 92 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில், ரூ.21ஆயிரத்தை கைப்பற்றி, சார்பதிவாளர் பாரதிதாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கரூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.20 ஆயிரத்து 500 ரொக்கம், உதவியாளர் ராமனிடம் இருந்த 8 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Views: - 29

0

0