வாகன சோதனையில் பிடிபட்ட 10 கிலோ கஞ்சா..

8 November 2020, 9:16 am
Quick Share

கோவை:துடியலூர் காவல் நிலையம் தடாகம் பொறுப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 24 வீரபாண்டி பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் போது எம்.ஆர்.டி சேம்பர் அருகில் வந்த காரை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர்.

அப்போது காரில் வந்த இருவரில் ஒருவர் காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார் உடனடியாக காரை பிடித்த காவல்துறையினர் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொள்ளும் பொழுது அவர் கேரள மாநிலம் கோட்டதுரையை சேர்ந்த சுப்ரமணியன் (28) என்பது தெரியவந்தது.

மேலும் காரில் 5 பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த பொட்டலங்களை சோதனை செய்யும் போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுப்ரணியனை கைது செய்த காவல்துறையினர் காரையும் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 2 கிலோ எடையுள்ளது என்பதும் தப்பி ஓடிய நபர் கோட்டதுரையை சதீஷ்குமார் என்பதும் கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து செல்ல முற்பட்டதும் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியத்திடம் கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது இதில் வேறு யாரேனும் தொடர்பு கொண்டு உள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தப்பி ஓடிய சதீஷ்குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Views: - 7

0

0