தருமபுரி அருகே 10 வயது சிறுவனை வன்கொடுமை செய்து கிணற்றில் தள்ளி கொலை செய்த 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேவுள்ள மிட்டாரெட்டிஅள்ளி காலணியை சேர்ந்த 10 வயது சிறுவன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த சிறுவன் மீண்டும் வீட்டிற்கு வராததால், காணாமல் போயி விட்டதாக அவனது பெற்றோர் அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், 10 வயதுடைய சிறுவன் என்பதால் உடனடியாக விசாரணையில் இறங்கியது காவல்துறை.
முருகன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்த சிறுவனை, வீட்டருகே உள்ள உறவினரான இளங்கோ (19) என்ற வாலிபர், மாங்காய் பறித்து வரலாம் என கூறி அழைத்துச் சென்றதும், இருவரும் ஒன்றாக நடந்து சென்றவர்கள், சிறிது நேரத்திற்கு பிறகு இளங்கோ மட்டும் தனியாக நடந்து வரும் சிசிடிவி பதிவுகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், வாலிபர் இளங்கோவை அதியமான்கோட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், காவல்துறைக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
சிறுவனை அருகே இருந்த விவசாய கிணற்றில் தள்ளி கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்த நிலையில், உடனடியாக, தீயணைப்பு த்துறையினர் வரவழைக்கப்பட்டு இரவு முழுவதும் தேடியதில் கிணற்றுக்குள் சிறுவன் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவனது உடல் கண்டு எடுக்கப்பட்டது. சிறுவனின் உடலை பார்த்த உடனே, பெற்றோர், உறவினர் மற்றும் கிராமத்தினர் என அனைவரும் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.
அவர்களை சமாதானப்படுத்தி, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனின் சடலத்தை போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர், விசாரணை வளையத்திலிருந்த இளங்கோவை விசாரிக்கும் விதத்தில் காவல்துறை விசாரித்தில், நடந்தது என்ன என்பதை ஒப்புக்கொண்டான் வக்கிரபுத்தி கொண்ட இளங்கோ.
வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை மாங்காய் பறித்து வரலாம் எனக்கூறி, தந்திரமாக பேசி அழைத்துச் சென்று, மறைவான இடத்தில் வைத்து சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். முருகனுக்கு மாலையிட்டிருக்கும் தன்னிடம் இப்படி தவறாக நடந்துகொள்கிறாயே, இரு தனது பெற்றோரிடம் சொல்லி தருகிறேன், என்று சிறுவன் சத்தம் போட்டுள்ளான்.
இதனால், பயந்து நடுங்கிய இளங்கோ, நடந்ததை வெளியே சொன்னால், நாம் மாட்டி விடுவோம் என்ற பயத்தில், சிறுவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். அதன்படி, அருகே இருந்த கிணற்றில் சிறுவனை தள்ளிவிட்டு கொன்றதாக வாலிபர் இளங்கோ வாக்குமூலம் அளித்துள்ளான். இதைத் தொடர்ந்து, இளங்கோவை அதியமான் கோட்டை காவல்துறையினர் கைது செய்தது.
கைதாகியுள்ள வாலிபர் இளங்கோ அரசு பள்ளி ஒன்றில் பணிரெண்டாம் வகுப்பு படித்து வருவது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தனது பாலியல் இச்சையை தீர்க்க சிறுவனை கொலை செய்த சம்பவத்தில் பணிரெண்டாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.