கொரோனா தடுப்பூசி 100% முழுமையடைய சைக்கிள் பேரணி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

10 July 2021, 11:24 am
Quick Share

கோவை: கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் முழுமையடையவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் 50 கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கோவையில் இன்று நடைபெற்றது.

நேரு கல்வி குழுமம், கோவை பெடலர்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோவைப்புதூர் சார்பில் இன்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் முழுமையடையவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த பேரணியானது கோவைபுதூர் மைதானத்தில் துவங்கியது.

இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுண்டக்காமுத்தூர், பேரூர், பச்சாபாளையம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, நல்லூர் வயல், இக்கரை போளூவாம் பட்டி வழியாக சிறுவாணி மீண்டும் கோவைப்புதூரை வந்தடைந்தனர்.

50 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பேரணியை கோவை பீரங்கி படை பிரிவின் கார்னல் சந்திர சேகர் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3201 ஆளுநர் ராஜசேகரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Views: - 132

0

0