100 டன் எடை கொண்ட கிராணைட் பாறை விழுந்து விபத்து : கடும் போக்குவரத்து நெரிசல்!!

25 September 2020, 2:11 pm
Granite Accident- updatenews360
Quick Share

திருவள்ளூர் : 100 டன் கிரானைட் கற்களை கர்நாடகாவில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த பாறைகள் விழுந்ததால் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் கர்நாடக பதிவு எண் கொண்ட கிரானைட் பாறைகளை காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கொண்டு செல்ல ஏற்றி வந்த லாரியில் 100 டன் எடை கொண்ட இரண்டு கிரானைட் பாறைகள் தவறி விழுந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.

பாடிய நல்லூரிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்து லாரிமீது லேசாக உரசியது. அதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். காயமடைந்த சரவணன், அவரது மகன் ஸ்ரீராம் மற்றும் குப்புசாமி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்குன்றம் போலீசார் மாதவரம் போக்குவரத்து போலீஸார் விசாரணை கொண்டு வருகின்றனர். லாரி விபத்து காரணமாக போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பாதிப்பு ஏற்பட்டதால் கிரேன் உதவியுடன் கிரானைட் பாறை கற்களை அங்கிருந்து சாலை ஓரமாக அகற்றி வைத்தனர்…

Views: - 1

0

0