சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அதிமுகவை சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளோம்
போர்க்களத்தில் போரிட இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்கான 10 நாட்கள் இடைப்பட்ட பயிற்சி பெற்று எனது தலைமையில் போர்க்களத்தில் போரிட 1000 இளைஞர்கள் தயாராக உள்ளோம்
பயங்கரவாதத்திற்கு எதிராக நடக்கும் இந்த யுத்தத்தில் அதிமுகவின் பங்கு நிச்சயம் இருக்கும். அதிமுகவினர் தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதற்கு அடையாளமாக யுத்த களத்திற்கு இளைஞர்கள் தேவை என்று சொன்னால் விருதுநகர் மாவட்டத்திலிருந்து இளைஞர்களை அழைத்துச் செல்ல நான் தயாராக உள்ளேன்.
பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை உலகமே பாரட்டுகிறது. நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் படை எடுத்து வைக்கும் திமுக ஆட்சியில் இதுவரை எந்த வாக்குறுதியில் நிறைவேற்றவில்லை
நீட் ரத்து செய்வதாக கூறினார்கள் ரத்து செய்யவில்லை, தமிழகத்தில் மதுக்கடையை மூடுவோம் என ஸ்டாலின் சொன்னார் , தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகளவில் உள்ளதாக கனிமொழி சொன்னார், ஆனால் மதுக்கடைகளை மூடாமல் மது விற்பனையில் 50 ஆயிரம் கோடி வருவாயை அதிகரித்துள்ளார்கள்.
அரிசி, பருப்பு, செங்கல் விலை என சரமாரியாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் இருந்தால் குடும்பத்தை நடத்தலாம் என்ற நிலை இருந்தது, ஆனால் தற்போது திமுக ஆட்சியில் 50 ஆயிரம் இருந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின் சிறப்பையும் ஸ்டாலின் ஆட்சியின் கஷ்ட காலத்தையும் வகுத்து பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது பொய்யா ஸ்டாலின் சொல்வது பொய்யா என்பது மக்களுக்கு தெரியவரும்
ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய். மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார், அது நடக்காது. திமுகவிற்கு அருமையான சம்பட்டியடி அடிப்பார்கள்.
குரு பெயர்ச்சியில் திமுகவிற்கு இறங்கு முகம், அதிமுகவிற்கு ஏறுமுகம். திமுகவின் ஆட்சியில் முதல்வரை தவர அரசு ஊழியர்கள் மக்கள் உள்ளிட்ட அனைவரும் கஷ்டப்படுகிறார்கள், இதற்கான தக்க பதிலடி 2026 தேர்தலில் கிடைக்கும் என கூறினார்.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
This website uses cookies.