’10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வு’ – செப்; 21..!

20 August 2020, 3:57 pm
Quick Share

10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வு வரும் செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கவுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வுகளுக்கு, தனித்தேர்வர்களும், பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்த, வருகைப்புரியாத தேர்வர்களும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

மார்ச்-2020 பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவர்களாக தேர்வு எழுதி, தேர்ச்சிபெறாத மற்றும் வருகை புரியாதவர்கள், தனித்தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கும் வரும் 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான துணைத்தேர்வு அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 7-ந் தேதி வரையிலும், பிளஸ்-2 வகுப்புக்கு செப்டம்பர் 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

Views: - 25

0

0