10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு….: அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்…தேர்வுத்துறை அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
1 October 2021, 1:40 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள்வரும் 4ம் தேதி முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ம்வகுப்பு மாணவர்கள், வரும் 4ம் தேதி முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

10-ஆம் வகுப்பு மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம்- தேர்வுத்துறை

மார்ச் 2021 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அனைத்து பள்ளி மாணவர்களும் அக்டோபர் 4ம் தேதி அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை புரியும் தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 339

0

0