10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வேன் டிரைவர் : கொரோனா சமயத்தில் ஏற்பட்ட பழக்கம்… பாய்ந்தது போக்சோ சட்டம்!!

Author: Babu Lakshmanan
28 January 2023, 2:54 pm
Student Gang rape - Updatenews360
Quick Share

ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வேன் டிரைவரை போக்சோ வழக்கில் கைது செய்த ராணிப்பேட்டை மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை பாரதி நகர், காரை, காட்டன் பஜார் தெருவைச் சேந்தவர் சுந்தர்ராஜ் (28), சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் டிரைவராக பணியாற்று வருகிறார். சுந்தர்ராஜ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் அவர் பணி புரியும் நிறுவனத்தில் கொரோனா காலத்தில் அக்ராவரம் மலைமேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது, சுந்தர்ராஜனுக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மீண்டும் லாலாபேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு கல்வி பயின்று வந்தார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி சுந்தர்ராஜ் அவரை வெளியூர் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Student Gang rape - Updatenews360

சிறுமியின் பெற்றோர் சிறுமியை காணவில்லை என்று சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியையும், சுந்தர்ராஜை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வாசுகி, போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்து சுந்தர்ராஜை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை வேலூர் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 459

0

0