காவல்துறையில் உள்ள 11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு
17 September 2020, 5:32 pmசென்னை : தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் சுமார் 10,906 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. www.tnusrbonline.org எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செப்., 26-ம் தேதி முதல் அக்., 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்களுக்கு மாவட்ட வாரியாக எழுத்துத்தேர்வு டிச.,13ம் தேதி நடைபெறும். மொத்த எழுத்துத்தேர்வு ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடக்கும். அதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல் தகுத்தேர்வு நடத்தப்பட்டு, பின்ன நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல், பூர்த்தி செய்த பிறகு பதிவேற்றம் செய்யும் தேதி, வயது வரம்பு மற்றும் தகுதி உள்ளிட்ட விரிவான விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.