12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை : தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகள் மூடல்.!

9 October 2020, 10:50 am
TN Saloon Closed - Updatenews360
Quick Share

கோவை : திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ததை கண்டித்து இன்று கோவை மாவட்டத்தில் சுமார் 1300 சலூன்கடைகள் அடைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் 12 வயது மகள் கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிருபானந்தன் என்பவரை போலீசார் கைது செய்திருந்த இந்நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அந்த நபரை விடுதலை செய்துள்ளது.

Mumbai Crime Watch: Kolsewadi Police arrest gym trainer for sexually harassing  minor

இந்த சூழலில் சிறுமியை படுகொலை செய்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை அடைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சுமார் 1300 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து கோவை மாவட்ட மருத்துவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Views: - 71

0

0