சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
26 March 2021, 3:44 pm
chennai trains - updatenews360
Quick Share

சென்னை: சென்னை எழும்பூர் – மதுரை உட்பட பல்வேறு இடங்களுக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரையில் இருந்து ஏப்.17ம் தேதி முதல் வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06158) மறுநாள் காலை 6.55 மணிக்கு சென்னை எழும்பூர் வரும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து ஏப்.18ம் தேதி முதல் வெள்ளி, ஞாயிறுகளில் இரவு 10.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06157) மறுநாள் காலை 8.10 மணிக்கு மதுரை செல்லும்.

கோயம்புத்தூரில் இருந்து ஏப்.16ம் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (02682) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.17ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (02681) மறுநாள் காலை 6.30 மணிக்கு கோயம்புத்தூர் செல்லும்.

தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா சிறப்பு ரயில்கள் (06191/06192) ஏப்.26ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.10ம் தேதி செவ்வாய் தவிர மற்ற நாட்களில் காலை 7.10 மணிக்கு புறப்படும் சதாப்திசிறப்பு ரயில் (06029) அதேநாள் மதியம் 2.15 மணிக்கு கோயம்புத்தூர் செல்லும்.

மறுமார்க்கமாக கோயம்புத்தூரில் இருந்து ஏப்.10ம் தேதி முதல் மாலை 3.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06030) அதேநாளில் இரவு 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும். இதேபோல், சென்னை சென்ட்ரல் – நிஜாமுதீன் (06151/06152), பெங்களூரு – கோயம்புத்தூர் (06153), மதுரை – நிஜாமுதீன்(06155/06156), புதுச்சேரி – கன்னியாகுமரி (06861/06862), புதுச்சேரி – மங்களூரு (06855/06856) உட்படபல்வேறு இடங்களுக்கு மொத்தம்13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படஉள்ளன. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 76

0

0